Kollywood News

  • Home/
  • Cine News/
  • உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்து விட்டோம், ஹார்டிக் பாண்டிய மீண்டும் அணிக்கு திருப்புகிறார் - விராட் கோலி

உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்து விட்டோம், ஹார்டிக் பாண்டிய மீண்டும் அணிக்கு திருப்புகிறார் - விராட் கோலி

உலகக்கோப்பை அணிக்காக 11 வீரர்களை தேர்வு செய்துவிட்டோம். அதிகபட்சமாக ஒரேயொரு மாற்றம் மட்டுமே இருக்கலாம் என்று விராட் கோலி தெரிவுத்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றி ஆஸ்திரேலியா அணி முத்திரை பதித்தது. ஆஸ்திரேலியா அணி முதல் 2 போட்டிகளில் தோற்றது. அதன்பின் நடத்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று முத்திரை பாதித்தது.

10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய மண்ணில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றி உள்ளது. இதற்குமுன் 2009 ஆண்டு இந்திய மண்ணில் தொடரை கைப்பற்றி இருந்தது.

இந்த தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறியாவது ;
                                      273 ரன் எடுக்கக்கூடிய இலக்குதான். கடைசி நேரத்தில் அவர்கள் எங்களை விட சிறப்பாக செயல்பட்டனர். இக்கட்டான நேரத்தில் அவர்கள் துணிச்சலாக செயல்பட்டனர்.இந்த வெற்றிக்கு ஆஸ்திரேலியா தகுதியானவர்கள்.
இந்த தொடரை நாங்கள் இழந்ததற்கு எந்த காரணமும் முன்வைக்க முடியாது. பல மாதங்களாக தொடர்ச்சியாக விளையாடி கொண்டு இருக்கிறோம் என்பதில் பெருமைப்படுகிறோம் 
உலகக்கோப்பை போட்டிக்கான 11 பேர் கொண்ட இந்திய அணி வீரர்களை முடிவு செய்து விட்டோம். யார் எந்த வரிசையில் ஆடுவது என்பது குறித்து ஆலோசிக்கப்படும். ஹார்டிக் பாண்டிய மீண்டும் அணிக்கு திருப்புகிறார். இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.    

share