Kollywood News

  • Home/
  • Cine News/
  • ''தி வேர்ல்ட் பெஸ்ட்'' என்ற பட்டம் வென்ற தமிழகச் சிறுவன்; அவரை பாராட்டிய இசை புயல்

''தி வேர்ல்ட் பெஸ்ட்'' என்ற பட்டம் வென்ற தமிழகச் சிறுவன்; அவரை பாராட்டிய இசை புயல்

தி வேர்ல்ட் பெஸ்ட் என்ற பொழுது போக்கு நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளிலிருந்து கலைக்குழுவினர் மற்றும் கலைஞர்கள் தனிநபராகவும் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். 

அதன் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்த்த பியானோ கலைஞரான சிறுவன் லிடியன் நாதஸ்வரமும் கலந்துகொண்டார்.தன் திறமையால் பலரின் பாராட்டுகளையும் தொடர்ந்து பெற்றுவந்தார்.

மேலும் போட்டியில் தன் அசாத்தியமான திறமையினால் இறுதிச்சுற்று வரை முன்னேறினர். இந்த இறுதிச் சுற்றில் பல்வேறு நாடுகளைச் சேர்த்த கலைஞர்கள் நடுவர்களாக இருந்தனர். அவர்கள் முன்னிலையில் இரண்டு பியானோக்களை ஒரே நேரத்தில் வாசித்து இறுதியில் பட்டத்தை வென்று அசத்தினார். லிடியனுக்கு 1 மில்லியன் டாலர் பரிசாக வழங்கப்பட்டது.

இதற்காக லிடியனுக்கு பல்வேறு பிரபலங்களும் திரைத்துறையினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். அதனைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் லிடியனின் வீட்டிற்கு சென்றார். அப்போது அவருக்கு நாதஸ்வரம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் முன்னிலையில் அவரது பாடல்களில் ஒன்றான என்னவளே பாடலை லிடியன் பியானோவில் வாசித்துக்காட்டினார். அப்போது நீங்கள் பியானோவை வாசியுங்கள் என லிடியன் தந்தை ரஹ்மானைக் கேட்க சிறிது நேரம் வாசித்து விட்டு நீயே வாசிடா என்று சிரித்துக்கொண்டு நகர்ந்துவிட்டார். இறுதியில் ஏ.ஆர்.ரஹ்மான் லிடியனவுடன் செல்பி எடுத்துக்கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்த்துள்ளார்.   

share