Kollywood News

  • Home/
  • Cine News/
  • இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படம்: வந்தியத்தேவன் வேடத்தில் கார்த்தி நடிக்கிறார்

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படம்: வந்தியத்தேவன் வேடத்தில் கார்த்தி நடிக்கிறார்

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படம் பொன்னியின் செல்வன். பல வருடங்களாக இந்த கதையை எடுக்க நினைத்தவருக்கு சரியாக நடிகர்களின் கால்ஷுட் கிடைக்கவில்லை.

முன்னணி நடிகர்கள் விஜய், மகேஷ் பாபு, எல்லாம் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ளனர் என்ற பேச்சு எழுந்தது. கடைசில் விக்ரம், ஜெயம் ரவி, சிம்பு, விஜய் சேதுபதி உள்ளிட்டோரை வைத்து இயக்க இருந்தார்.

ஆனால், இயக்குனர் கேட்ட கால்ஷுட் விஜய் சேதுபதியிடம் இல்லை என்பதால் அந்த வேடத்தில் கார்த்தியை நடிக்க வைக்க திட்டமிட்டுவுள்ளார். அந்த கதாபாத்திரத்தின் பெயர் வந்தியத்தேவன் என கூறப்படுகிறது.

2.0 படத்தை தொடர்ந்து இப்படத்தையும் பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது லைகா நிறுவனம்

share