Kollywood News

  • Home/
  • Cine News/
  • பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்றே தெரியாது ? தமிழக கிரிக்கெட் வீரரின் tweet !!!

பொள்ளாச்சியில் என்ன நடந்தது என்றே தெரியாது ? தமிழக கிரிக்கெட் வீரரின் tweet !!!

பொள்ளாச்சியில் சமூக வலைத்தளம் மூலம் பல பெண்களை மயக்கி, பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துவுள்ளது. 

காம கொடூர கும்பல்களிடம் சிக்கித் தவித்த பெண்களின் இந்த அபாயக் குரல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு, சபரி ராஜன், சதிஷ், வசந்த் குமார், ஆகிய 4 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுவுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தமிழகத்தை சேர்த்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது twitter லில் பதிவிட்டுருந்தார். அதில் '' பொள்ளாச்சியில் என்ன நடக்கிறது என யாராவது சொல்ல முடியுமா?'' என்று கேட்டுருந்தார்.

இதனால், ஆத்திரம் அடைந்த நெட்டிசன்கள் தமிழகத்தில் இருந்துகொண்டு இது கூட தெரியவில்லை என்று கலாய்த்தனர்.

share