Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் விஷாலுக்கு இன்று நிச்சயதார்த்தம்: ஹைதராபாத்தில் நடக்கிறது

நடிகர் விஷாலுக்கு இன்று நிச்சயதார்த்தம்: ஹைதராபாத்தில் நடக்கிறது

ஹைதராபாத்தில் இன்று நடிகர் விஷாலின் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிகிறது. 

கடத்த சில வருடங்களாவே தமிழ் சினிமா வட்டாரத்தில் அடிக்கடி அடிபடும் செய்தியாக இருந்தது விஷால் திருமணம். அவர் யாரை திருமணம் செய்ய போகிறார் என்பது கேள்விக்குறியாக இருந்தது. நடிகர் சங்கம் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகே தனக்கு கல்யாணம் நடக்கும் என வாக்கும் கொடுத்திருத்தர்.

இதற்கிடையே கடத்த சில மாதங்கள் முன்பு இவரது திருமணம் குறித்து சில வதந்திகள் பரவின. ஆகவே விஷால் தானாக முன்வந்து தனது வாழ்கை துணையை பற்றி கடத்த ஜனவரி மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். ஆனால் அவர் தனது திருமணம் எப்போது நடக்கும் எங்கு நடக்கும் என்பதை தெரிவிக்கவில்லை. 

இந்நிலையில் இன்று மாலை விஷாலுக்கும் அவரது வாழ்க்கை துணையான அலிஷா அல்லாவுக்கு ஹைதராபாத்திலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இரு வீட்டாருக்கும் மிக நெருக்கமான சிலர் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சிக்கு நடிகை குஷ்பு, நடிகர்கள் சுந்தர் சி, ரமணா, பசுபதி, சதீஷ், ஸ்ரீமன், நந்தா ஆகிய திரை நட்சத்திரங்கள் கலந்துகொள்கிறார்கள்.

share