Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி ஒரு புது அப்டேட் இதோ:

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை பற்றி ஒரு புது அப்டேட் இதோ:

அஜித், சிவா கூட்டணியில் 4வது முறையாக வெளியான படம் விஸ்வாசம். படத்திற்கு வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது, அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டும் பெற்றது.

இதையடுத்து அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்துவருகிறார். பெண்களுக்கான முக்கிய கதையாக அமைந்துள்ள இப்படத்தில் அஜித்திற்கு தரமான சீன் ஒன்று இருக்கிறதாம், அதை சமீபத்தில் அஜித் நடித்து முடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

தற்போது என்ன விஷயம் என்றால் பாலிவுட் நடிகை வித்யா பாலன் இடம்பெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறதாம். அஜித், வித்யா பாலன் இருவரும் இருக்கும் காட்சிகள் இந்த இரண்டு நாட்களில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துவுள்ளார்.

இப்படத்தில் தயாரிப்பாளர் போனி கபூர் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒப்புக் கொண்ட வித்யா பாலன் இரண்டு நாள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம்.

share