Kollywood News

  • Home/
  • Cine News/
  • ரீமேக் ஆகும் 'கனா': எந்த மொழியில்? யார் ஹீரோயின் தெரியுமா?

ரீமேக் ஆகும் 'கனா': எந்த மொழியில்? யார் ஹீரோயின் தெரியுமா?

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான படம் ''கனா''.

பாடலாசிரியர், பாடகர், நடிகர் என கோலிவுட்டில் வலம்வந்த அருண்ராஜா காமராஜ், இயக்குநராக அறிமுகமான படம் ''கனா''. பெண்கள் கிரிக்கெட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தார். அவருடைய அப்பாவாக சத்யராஜ் நடித்தார். கௌரவ வேடத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார்.

எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சிவகார்த்திகேயன் முதன்முதலாகத் தயாரித்த படம் இது. திபு நிணன் தாமஸ் இசையமைத்த இந்தப்படம் கடந்த வருடம் 2018 டிசம்பர் 21ம் தேதி ரிலீஸ் ஆகி, மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இந்தப் படத்தைத் தெலுங்கில் ரீமேக் செய்கின்றனர். ''கனா'' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரமான ''கெளசல்யா முருகேசன்'' என்பதைக் மாற்றி ''கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி'' என படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளனர்.

தெலுங்கிலும் ஐஸ்வர்யா ராஜேஷே ஹீரோயினாக நடிக்கிறார். பிமநேனி சீனிவாச ராவ் இயக்க இந்தப் படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் ஏப்ரலில் தொடக்க இருப்பதாக தெரிகிறது. ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் மூன்றாவது தெலுங்குப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More about :

share