Kollywood News

  • Home/
  • Cine News/
  • பிரம்மண்ட இயக்குனர் ராஜமெளலியின் அடுத்த படம் 400 கோடி பட்ஜெட்.. எந்தஎந்த நடிகர்கள் நடிக்குறாங்க தெரியுமா?

பிரம்மண்ட இயக்குனர் ராஜமெளலியின் அடுத்த படம் 400 கோடி பட்ஜெட்.. எந்தஎந்த நடிகர்கள் நடிக்குறாங்க தெரியுமா?

எஸ்.எஸ்.ராஜமவுலி அடுத்த படத்திற்கான ஆராய்ச்சிகள் கடத்த ஒரு சில வருடங்களாக நடந்து கொண்டுருப்பதாக கூறினார்.,

பிரம்மண்டம் என்றாலே நம் நினைவுக்கு வருவது இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி. இவர் பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் புகழ் பெற்றவர். 
பின்பு தனது அடுத்த படத்திற்கான ஆராய்ச்சிகள் கடத்த ஒரு சில வருடங்களாக நடந்து கொண்டுருப்பதாக கூறினார். இந்தப்படம் வரலாற்று சிறப்புமிக்க படமாக இருக்கும் என்றும் விடுதலைக்கு முன்னர் இரண்டு வீரர்களின் வாழ்கை வரலாற்றை மையப்படுத்தி படம் இருக்கும் என்று கூறியுள்ளார்.

இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 400 கோடி ரூபாய் இருக்கலாம் என்று தெரிகிறது. இந்த படத்தில் ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன், ஆலியா பட், ஹாலிவுட் நடிகை டெய்சி எட்கேர் ஜோன்ஸ் நடிக்கிறார்கள் இவர்களுடன் சேர்த்து தமிழ் நடிகர் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


இந்த படம் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தயாராக இருக்கிறது. ஜூலை 30 2020ல் படம் வெளியாகலாம் என்று எதிர்பாக்கப்படுகிறது.

share