Kollywood News

  • Home/
  • Cine News/
  • உறியடி 2 படத்தின் ''உரிமை'' பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது:

உறியடி 2 படத்தின் ''உரிமை'' பாடல் ப்ரோமோ வீடியோ வெளியானது:

உறியடி படம் 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல்பாகத்தில் இயக்கி நடித்த விஜயகுமாரே இதிலும் நாயகனாக நடித்து இயக்குகிறார்.

சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் அனைவரையும் கவர்ந்தது. அடுத்ததாக ''வா வா பெண்ணே'' பாடல் ப்ரோமோ வீடியோ இணையத்தில் ஹிட் அடித்தது. 96 பட புகழ் இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தற்போது இந்த படத்திலிருந்து ''உரிமை'' எனும் பாடல் வெளியாகிவுள்ளது. விஜயகுமார் மற்றும் நாகராஜி இந்த பாடல் வரிகளை எழுதியுள்ளார். 

share