Kollywood News

  • Home/
  • Cine News/
  • ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்கள் : அதில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகர் விஜய்

ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட 10 பிரபலங்கள் : அதில் இடம்பிடித்த ஒரே தமிழ் நடிகர் விஜய்

2018-ம் ஆண்டு முடிவடையும் நிலையில், இந்த ஆண்டு ட்விட்டரில் அதிகம் பேசப்பட்ட பிரபலங்கள் பட்டியலை ட்விட்டர் இந்தியா வெளியிட்டுள்ளது.

இதில் தமிழ் நடிகர்களில் இந்திய அளவில் நடிகர் விஜய் இடம்பெற்றுள்ளார். 10 பேர் கொண்ட பட்டியலில் விஜய்க்கு 8-ம் இடம் கிடைத்துள்ளது.

இந்தப் பட்டியலில் இந்திய பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து இரண்டாம் இடம் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது.

பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பிரபலங்கள்

1. மோடி

2. ராகுல் காந்தி

3. அமித் ஷா

4. யோகி ஆதித்யநாத்

5. அர்விந்த் கேஜ்ரிவால்

6. பவன் கல்யாண்

7. ஷாருக் கான்

8. விஜய்

9. மகேஷ் பாபு

10. ஷிவ்ராஜ் சிங் சவுகான்

Read More about :

share