Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூர்யாவின் “24” படம் ஏற்படுத்திய புதிய சாதனை..!!

சூர்யாவின் “24” படம் ஏற்படுத்திய புதிய சாதனை..!!


யாவரும் நலம் படத்தினை இயக்கிய விக்ரம் கே குமார் இயக்கத்தில் நாளை உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது “24”. டைம் டிராவலிங் கதையாக உருவாகியிருக்கும் இப்படத்தில் சூர்யா மூன்று விதமான ரோல்களில் நடிக்கவுள்ளார்.

நித்யா மேனன், சமந்தா படத்தின் நாயகிகளாக நடித்துள்ளனர். ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகியிருக்கும் இப்படத்தினை சூர்யா தனது சொந்த நிறுவனமான 2டி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் சார்பாக தயாரித்திருக்கிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா உலகம் முழுவதும் வெளியிடுகிறார்.

மொத்தமாக 2200 க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது இந்த “24”. வெளிநாடுகளில் மட்டும் 650 திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. வெளிநாடுகளில் ஒரு தமிழ் திரைப்படம் இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் வெளியானதில்லை. இதுவே முதல் முறையாம்.

share