'2.ஓ’ படத்தின் டீசர், ட்ரைலர் வெளியீட்டில் தாமதம்!


ரஜினி நடிக்கும் '2.0' படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் அண்மையில் அது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்ற செய்தி ரசிகர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. 

இந்நிலையில், துபாயில் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றதை தொடர்ந்து நம்பவர் 22ம் தேதி ஹைதராபாத்தில் டீஸர் ரிலீஸ் மற்றும் டிசம்பர் 12ம் தேதி சென்னையில் டிரைலர் வெளியீடு என்று கூறப்பட்டது. 

ஆனால் படத்தில் சில வி.எப்.எக்ஸ். பணிகள் இன்னும் மீதம் இருப்பதால் இந்த டீஸர், டிரைலர் ரிலீஸ் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரஜினி ரசிங்கர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழுந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

share