Kollywood News

  • Home/
  • Cine News/
  • 60 வயது சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா...!!

60 வயது சிம்புவிற்கு ஜோடியாக நடிக்கும் தமன்னா...!!


சிம்பு நடிப்பில் படுவேகமாக வளர்ந்து வருகிறது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் சிம்பு மூன்று கதாபாத்திரத்தில் நடித்து வருவது அனைவரும் அறிந்தது தான். இதில் மதுரை மைக்கேல் கெட்-அப் படமாக்கப்பட்டு விட்டது. அடுத்ததாக அஸ்வின் தாதா கெட்-அப்பில் நடிக்கவிருக்கிறார். இது ஒரு 60 வயது நிரம்பிய தோற்றம் இந்த வேடத்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்கவிருக்கிறார்.

60 வயது சிம்புவுக்கு ஜோடி என்றால் தமன்னாவுக்கும் கிட்டத்தட்ட 60 வயது முதிய பெண்ணின் கேரக்டரா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
 
மதுரை மைக்கேல் கேரக்டரின் டீசர் சமீபத்தில் வெளியான மாதிரி விரைவில் அஸ்வின் தாதா கேரக்டரின் டீசர் வெளிவரவுள்ளதாகவும், அப்போது இந்த கேள்விக்கான பதில் டீசரில் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

share