Kollywood News

  • Home/
  • Cine News/
  • 'ட்ரிபிள் ஏ அப்டேட்’: அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது...??

'ட்ரிபிள் ஏ அப்டேட்’: அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது...??


சிம்புவின் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு திண்டுக்கல்லில் நடைபெற்றது. அங்கு மதுரை மைக்கேல் என்ற கதாபாத்திரம் படமாக்கப்பட்டது.,

இதன் டீசரும் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இன்னும் இரண்டு கதாபாத்திரத்திற்கான வேடங்களின் படப்பிடிப்பு எடுக்கப்பட உள்ளது. இந்த மாதம் 14 ஆம் தேதி அடுத்த கெட்-அப்பிற்கான படப்பிடிப்பினை துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. மொத்தமாக ஒன்பது பாடல்கள் படத்தில் இடம்பெறுகிறதாம். மதுரை மைக்கேலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார்.

share