Kollywood News

  • Home/
  • Cine News/
  • விஜய் 63 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து

விஜய் 63 படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து

விஜய்யின் 63வது படப்பிடிப்பு சென்னையை சுற்றியே நடக்கிறது. எப்போது படப்பிடிப்பு முடிந்து படம் பற்றிய மற்ற விஷயங்கள் வெளியாகும் என்ற ஏக்கத்தில் ரசிகர்கள் உள்ளார்கள்.

இந்த நேரத்தில் தளபதி 63 படப்பிடிப்பில் ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. ஷுட்டிங் ஸ்பாட்டில் 100 அடிக்கு மேல் வைக்கப்பட்டிருந்த ஃபோக்கஸ் லைட் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

லைட் தவறி கீழே விழுந்ததில் அங்கு நின்று கொண்டிருந்த மின் பணியாளர் செல்வராஜ் என்பவர் படுகாயம் அடைந்தார்.

உடனே அவரை படக்குழுவினர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் படக்குழுவினரை கொஞ்சம் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Read More about :

share