Kollywood News

  • Home/
  • Cine News/
  • கமலை ஓவர்டேக் செய்த நடிகர் - புகைப்படங்கள் உள்ளே

கமலை ஓவர்டேக் செய்த நடிகர் - புகைப்படங்கள் உள்ளே

தமிழ் சினிமாவில் கெட்டப் என்றாலே முதலில் நம் நினைவுக்கு வருபவர் நடிகர் திலகம் சிவாஜி அவர்கள்தான். அந்த கால கட்டத்தில் ஒப்பனை வடிவமைப்பில் பெரியதொரு தொழில்நுட்பம் இல்லாத போதும் கிடைத்த தொழில் நுட்பத்தில் தனது நடிப்பின் மூலம் பல தோற்றங்களை விருப்பத்துடன் தன்னில் அலங்கரித்துக்கொண்டு நம்மை மகிழ்வித்தவர்.

Image result for navarathri sivaji

அதன் பிறகு கெட்டப், மேக்கப் ஜாம்பவானாக இன்றுவரை இருந்து வருபவர் உலகநாயகன் கமல்தான். எந்த தோற்றமாகினும் எத்தனை நேரமாகினும் அலுக்காமல் தேடி விரும்பி ஒப்பனை செய்துகொள்பவர். நவராத்திரியில் சிவாஜி செய்திருந்த ஒன்பது கதாப்பாத்திரங்களை உடைத்து தசாவதாரத்தில் பத்து கெட்டப்பில் வந்து அசத்திக்காட்டியிருப்பார்.


ஆனால் தற்போது வெளிவந்துள்ள தமிழ் படம் இரண்டாம் பாகத்தில் நகைச்சுவை நடிகர் சதிஷ் அதையும் கடந்து பதிமூன்று கெட்டப்புகளில் ஒரே படத்தில் நடித்து கமலின் சாதனையை ஓவர் டேக்  செய்துள்ளார். கமலுடன் இவரை ஒப்பிட இயலாது என்பதை நாம் அனைவரும் அறியினும் சதீஷின் இந்த முயற்சியை பாராட்டித்தான் ஆகவேண்டும்.



தமிழ் படம் முதல் பாகத்தில் வில்லியின் அடியாளாக  நடித்த சதிஷ் இந்த இரண்டாம் பாகத்தில் பழிவாங்கும் மெயின் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.



Read More about :

share