Kollywood News

  • Home/
  • Cine News/
  • யுவன் இல்லை என்றால் நான் இல்லை : தனுஷ்

யுவன் இல்லை என்றால் நான் இல்லை : தனுஷ்

இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ள மாரி 2 படம் வரும் 21ம் தேதி ரிலீஸாக உள்ளது. 

இந்நிலையில் படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது. செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனுஷ் கூறியதாவது,

20 வருடமாக எதிர்ல இருக்கும் இசையமைப்பாளரின் பெயர் மாறி கொண்டே இருக்கிறது. ஆனால் யுவன் அப்படியே இருக்கிறார்.

துள்ளுவதோ இளமை படத்தில் யுவன் இல்லை என்றால் நான் இல்லை. என் குடும்பம் நடுத்தெருவுக்கு வந்திருக்கும். அந்த படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமே யுவன் ஷங்கர் ராஜா தான். அது மட்டும் அல்ல காதல் கொண்டேன் வெற்றிக்கும் அவரே காரணம். அவர் அஜித் சார் படத்திற்கு இசையமைக்க உள்ளதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார்.

Read More about :

share