Kollywood News

  • Home/
  • Cine News/
  • சூப்பர்ஸ்டார் பெயரில் புதிய சேனல் ஆரம்பிக்கும் தலைவர் ரஜினிகாந்த்

சூப்பர்ஸ்டார் பெயரில் புதிய சேனல் ஆரம்பிக்கும் தலைவர் ரஜினிகாந்த்

நடிகா் ரஜினிகாந்த் புதிதாக கட்சி தொடங்குவதாக கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கூறி சரியாக ஓராண்டு முடியப் போகிறது.

ஆனால் இன்னமும் அவர் எந்தவித அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை.

ஆனால் அடிமட்ட அளவிலான பணிகள் நடைபெற்று 60 சதவீத பணிகள் முடிவடையும் தருவாயில் இருப்பதாக ரஜினிகாந்த் தொிவித்துள்ளாா். 

இந்த நிலையில் ரஜினி தனது கட்சிக்காக புதிய டி.வி. சேனல் தொடங்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்காக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 6 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ரஜினி மக்கள் மன்றம் பெயா் அச்சிடப்பட்ட லெட்டா் பேடில் சூப்பா் ஸ்டாா் டிவி, ரஜினி டிவி, தலைவா் டிவி என்ற மூன்று பெயா்கள் பரவி வருகிறது.

Read More about :

share