Kollywood News

  • Home/
  • Cine News/
  • கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வருகை

கருணாநிதி உடல்நலம் குறித்து கேட்டறிய காவேரி மருத்துவமனைக்கு நடிகர் விஜய் வருகை

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் கருணாநிதியை சந்திக்க ராகுல் காந்தி காவேரி மருத்துவமனைக்கு வந்திருந்தார். அப்போது கருணாநிதியிடம் ஸ்டாலின் ராகுல் வருகையை கூற அவர் தனது கண்களை திறந்து பார்க்கும் புகைப்படம் வெளியானது.

இதனால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு ரஜினிகாந்த், ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.

இந்நிலையில் இன்று நடிகர் விஜய் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் கருணாநிதியின் குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

Read More about :

share