Kollywood News

  • Home/
  • Cine News/
  • மெர்சலில் அரசியல் இருந்தது, அரசியலில் சர்க்கார் இருக்கும் : தளபதி விஜய்

மெர்சலில் அரசியல் இருந்தது, அரசியலில் சர்க்கார் இருக்கும் : தளபதி விஜய்

நடிகர் விஜய், துப்பாக்கி மற்றும் கத்தி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்து சர்கார் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாக்கி உள்ள இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தத் திரைப்படம், வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்பேசிய நடிகர் விஜய், “ஆளப்போறான் தமிழன் தமிழர்களின் அடையாளம், ஒரு விரல் புரட்சி ஒட்டு மொத்த மக்களின் அடையாளம். ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு கிடைத்தது, சர்காருக்கே ஆஸ்கர் கிடைத்தது போல உள்ளது. மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது, இதில் முருகதாஸ் அரசியலில் மெர்சல் செய்துள்ளார் என்று கூறினார்.

Read More about :

share