Kollywood News

  • Home/
  • Cine News/
  • இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சேரும் : விஷால்

இப்போதிலிருந்து போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சேரும் : விஷால்

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க ஏராளமான அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு வருகை புரிந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் நடிகரும், தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால், கருணாநிதி உடல்நலம் பெற வேண்டி தனது சமூகவலைதளம் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

”போராளி என்ற வார்த்தை இந்த நேரத்திலிருந்து கருணாநிதியையே சேரும். ஒரு நாள் இரவு அவர் வலுக்கட்டாயமாகச் சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து இப்போது வரை இந்த வார்த்தையையே கூறிக்கொண்டிருக்கிறார். எப்போதும் தன்னம்பிக்கையை விட்டுவிடாமல் வாழ்ந்து வருகிறார். வாழ்க்கையில் ஒவ்வொரு விஷயங்களையும் வித்தியாசமான கோணத்தில் எனக்கு நீங்கள் வழங்கினீர்கள். அன்புள்ள தலைவரே, நான் உங்களுக்குத் தலை வணங்குகிறேன்” இவ்வாறு நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Read More about :

share