Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீ டு சர்ச்சையில் சிக்கிய முன்னணி பாலிவுட் இயக்குனர்? தமன்னா அளித்த பதில் :

மீ டு சர்ச்சையில் சிக்கிய முன்னணி பாலிவுட் இயக்குனர்? தமன்னா அளித்த பதில் :

நடிகை தமன்னா தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவர். அவர் சமீபத்தில் பாலிவுட் பக்கம் சென்றார். ஆனால் அவர் நடித்த படங்கள் அங்கு வெற்றி பெறவில்லை.

தமன்னா நடித்த Himmatwala, Humshakals போன்ற படங்களை இயக்கிய சஜித் கான் மீ டூ சர்ச்சையில் சிக்கியுள்ளார். பல முன்னணி நடிகைகளிடம் அவர் தவறாக நடந்தார் என புகார் வந்த நிலையில் அவர் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இது பற்றி பேசியுள்ள தமன்னா, "நான் நடிக்கும் படங்களில் கதை என்ன என்று தான் பார்ப்பேன். அவருடன் நான் பணியாற்றிய படங்கள் பெரிதாக போகவில்லை. அவர் என்னிடம் தவறாக நடந்ததில்லை. அவருடன் பணியாற்றியது எளிதாகத்தான் இருந்தது" என கூறியுள்ளார்.

share