200 தொகுதிகளில் நடிகர்கள் கட்சி வெற்றி பெறும்: எஸ்.ஏ.சந்திரசேகர்

நடிகர்கள் பலர் அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் குதிப்பது குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கருத்து கூறிய இயக்குனரும் தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் அனைத்து நடிகர்களும் ஒன்றிணைந்து ஒரு கட்சியை ஆரம்பித்தால், அந்த கட்சி உறுதியாக 200 தொகுதிகளை கைப்பற்றும் என்று கூறினார்.

ஆனால் தற்போது நடிகர்கள் தனித்தனியாக தனிக்கட்சிகள் உருவாக்கி வருவதாகவும், இதனால் ஒவ்வொரு நடிகரின் ரசிகர்களின் ஓட்டு அந்தந்த நடிகர்களின் கட்சிக்கு சென்று பின்னர் மீண்டும் ஒரு ஊழல் ஆட்சி அமையவே வழிவகுத்துவிடும் என்றும் கூறினார்.

மேலும் 9 மணிக்கு ஆரம்பிக்கும் அறப்போராட்டத்திற்கு 11 மணிக்கு மேல் வரும் நடிகர்கள் எப்படி அரசியல் கட்சி ஆரம்பித்து மக்களை காப்பாற்ற போகின்றார்கள் என்று தெரியவில்லை என்றும் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்

Source : Indiaglitz

Read More about :

share