Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை அமலாபால் திடீர் கைது!

நடிகை அமலாபால் திடீர் கைது!


நடிகை அமலாபால் கார் விவகாரத்தில் சிக்கி, அது குறித்து பல தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில் அவர் தற்போது திடிரென்று கைது செய்யப்பட்டு, பின்பு பெயிலில் வெளியாகியுள்ளார். போலி ஆவணம் தாக்கல் செய்து சொகுசு கார்களை பதிவு செய்ததாக கூறி நடிகை அமலாபால், நடிகர் பகத்பாசில், நடிகரும் பாஜ எம்பியுமான சுரேஷ்கோபி ஆகியோர் மீது புகார் வந்ததை அடுத்து, குற்றப்பிரிவு போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

இதனையடுத்து, நேற்று கொச்சியில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு அமலாபாலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. நேற்று மாலை அங்கு அவர் ஆஜரானார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

 அதே போல், மற்ற இருவரையும் விசாரணைக்கு அழைத்த குற்றப்பிரிவு போலீசார் அவர்களையும் கைது செய்து பின்னர் ஜாமீனில் வெளியில் விட்டுள்ளது. மேலும், இவர்கள் முன்னதாகவே முன்ஜாமீன் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Read More about :

share