Kollywood News

  • Home/
  • Cine News/
  • கடற்கரை காற்றே ரஜினியின் நடிகை

கடற்கரை காற்றே ரஜினியின் நடிகை

காலா படத்தில் ரஜினியின் காதலியாக நடித்திருப்பவர் ஹுமா குரோஷி. அவர் கூறியதாவது: படிக்கும்போதே எனக்கு சினிமா கனவுவாக இருந்தது. படிப்பு முடிந்ததும் அதற்கான முயற்சியில் இறங்கினேன். கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தில் அறிமுகமானேன். தமிழில் காலாவுக்கு முன்னதாக மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘ஒயிட்’ படத்தில் இணைந்து நடித்தேன். தென்னிந்திய மொழி எதுவும் எனக்கு தெரியாது. ஆனாலும் நடிப்புக்கு மொழி ஒரு தடை கிடையாது.

 

காலாவில் நடிக்கும்போது ரஜினிசார், இயக்குனர் ரஞ்சித் எனக்கு தமிழ் கற்றுத்தந்தனர். கோலிவுட், பாலிவுட் படங்களுக்கான வித்தியாசம்பற்றி கேட்கிறார்கள். நிச்சயம் வித்தியாசம் இருக்கிறது.

 

பாலிவுட்டில் ஒரு நடிகை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒரு இமேஜ் உருவாக்கி வைத்திருக்கிறார்கள். சிவப்பாக, உயரமாக, ஒல்லியாக இருக்க வேண்டும். தமிழில் அப்படி கிடையாது. தினம் தினம் வாழ்வில் சந்திக்கும் நிஜகதாபாத்திரங்களை திரையில் கொண்டு வர எண்ணுகிறார்கள். அதனால்தான் கோலிவுட் உள்ளிட்ட தென்னிந்திய படங்கள் கமர்ஷியல் என்ற அம்சத்தையும் தாண்டி ஒரு படி உயரவே இருக்கிறது. ஓய்வு நேரத்தில் கடற்கரைக்கு செல்வது பிடிக்கும். சென்னையில் காலா படப்பிடிப்பு நடந்தபோது அடிக்கடி பீச் சென்றுவிடுவேன்: ஹுமா.

Read More about :

share