Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகை கஸ்தூரி டுவீட்க்கு பதில் அடி சிஎஸ்கே ரசிகர்கள்:

நடிகை கஸ்தூரி டுவீட்க்கு பதில் அடி சிஎஸ்கே ரசிகர்கள்:

நடிகை கஸ்தூரி தனது சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்து தான வந்து சிக்கும் ஆடு போல் சிக்கிக்கொள்வர். இந்த நிலையில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி குறித்து ஒரு டுவீட்டை பதிவு செய்தார். இதை பார்த்த டுவிட்டர் வாசிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்த போட்டியில் 109 ரன்கள் எடுத்தால் சென்னை அணி வெற்றி பெறும் என்ற எளிய இலக்கை நோக்கி நேற்று விளையாடியது. குறைவான இலக்காக இருந்தாலும் ஆரம்பத்திலேயே வாட்சன் விக்கெட் இழந்த சென்னை அணி  நிதானமாக விளையாடியது,'என்னய்யா இது  . பல்லாண்டு வாழ்க படத்துல  வாத்தியாரு லதாவை தடவினதை விட அதிகமா தடவுறாங்க' என்று நடிகை கஸ்தூரி பதிவு செய்திருந்தார். இந்த பதிவுக்கு டுவிட்டர் பயனாளிகளும் சிஎஸ்கே ரசிகர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
 

Read More about :

share