Kollywood News

  • Home/
  • Cine News/
  • உடலை இறுக்கி இரும்பாக்கிய தமிழ் நடிகை - புகைப்படங்கள் உள்ளே

உடலை இறுக்கி இரும்பாக்கிய தமிழ் நடிகை - புகைப்படங்கள் உள்ளே

கோ படத்தில் நாம் அனைவரும் கண்டு வியந்த வெகுளியான நடிப்பை வெளிப்படுத்தியவர் பியா பாஜ்பாய். உத்திர பிரதேசத்தில் பிறந்த இவர் ஆரம்ப காலகட்டத்தில் டெல்லியில் தாங்கும் விடுதிகளில் வரவேற்பாளராகவும், பகுதி நேர ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பிறகு அவற்றில் நாட்டமின்றி மும்பைக்கு வந்தவர் மாடலிங் மற்றும் விளம்பரங்களில் நடிக்கத்துவங்கினார்.




அவர் நடித்த சில பிரபலமான விளம்பரங்கள் அமிதாப் அவர்களுடன் இணைந்து நடித்த Cadbury சாக்லேட் விளம்பரம் மற்றும் தோனியுடன் இணைந்து நடித்த Sonata கடிகார விளம்பரம் மிகவும் பிரபலமானவை.

A.L.
விஜய் இயக்கத்தில் இவர் அறிமுகமான பொய் சொல்லப்போறோம் திரைப்படம் வணிக ரீதியாக தோல்வி அடைந்தாலும் பியா என்ற நடிகையை தமிழ் திரையுலகம் முழுதும் அறியச்செய்தது.

பிறகு அவர் நடித்த ஏகன் படமும் தோல்வியை தழுவியது, இருப்பினும் அந்த படம் மூலம் அஜித்தின் நன்மதிப்பை பெற்ற பியா அஜித்தின் மூலமே இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டு கோவா படத்தில் நடித்தார்.

அதன் பிறகும் பலே பாண்டியா போன்ற தோல்வி படங்களில் நடித்த பியா இயக்குனர் கே.வி.ஆனந்த் மூலமாக கோ படத்தில் நல்லதொரு கதாபாத்திரத்தில் நடித்து தனது முதல் வெற்றிப்பாதையை அமைத்துக்கொண்டார்.

சரி கதைக்கு வருவோம், இவர் தனது கவர்ச்சி படங்களையும், வெளியிடங்களில் எடுக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிடுவது வழக்கம். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்களை கண்டு ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர். காரணம் கடுமையான உடற்பயிற்சி செய்து தனது மென்மையான உடலை இறுக்கி இரும்புபோல் ஆக்கிக்கொண்டிருக்கிறார் பியா.




உடற்பயிற்சி மீது அதீத ஆர்வம் கொண்ட இவர் தனது ரசிகர்களுக்கு உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்பட?

Read More about :