Kollywood News

  • Home/
  • Cine News/
  • பாலிவுட்டிற்கு செல்லும் சென்சேஷன் நாயகி

பாலிவுட்டிற்கு செல்லும் சென்சேஷன் நாயகி

கீதா கோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது.

இதனால் மீண்டும் விஜய்யுடன் காம்ரேட் படத்தில் நடித்து வருகிறார், ராஷ்மிகா. இந்நிலையில் இவர் பாலிவுட் படம் ஒன்றில் நடிக்கவுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கவுள்ளதாக கூறப்படும் இப்படத்தில் ராஷ்மிகாவுக்கு ஜோடியாக ரன்தீப் ஹீடா நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஆகஸ்ட் மாதம் துவங்கவுள்ளதாக தெரிகிறது.

Read More about :

share