Kollywood News

  • Home/
  • Cine News/
  • அடடே தமிழ் சினிமாவின் புது முயற்ச்சி

அடடே தமிழ் சினிமாவின் புது முயற்ச்சி

            தமிழ் சினிமாவில் இன்றைய காலங்களில் நிறைய படங்கள் வந்தவண்ணம் உள்ளன அனால் அவற்றில் புதிய முயற்ச்சிகளோடு களம் காணும் படங்கள் மிக மிக குறைவு. அந்த வகையில் அடடே திரைப்படம் தமிழ்நாட்டிலேயே புதிய சாதனை செய்துள்ளது முழு படமும் மொபைல் போன் மூலம் படமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல் தேனாண்டாள் பிலிம்ஸ் ஹேமா ருக்மணி அவர்களால் வெளியிடப்பட்டு படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. படத்தின் நடிகர்கள் தங்களுக்கான பகுதியை திறம்பட செய்துள்ளனர். படத்தின் இசையமைப்பாளர் ரஷாந்த் அவர்கள் படத்தின் ஓட்டத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார் தன் இசையின் மூலமாக என்று தான் சொல்ல வேண்டும். இசையமைப்பாளர் ஷங்கர் கணேஷ் இல் ஷங்கரின் பேரன் தான் ரஷாந்த் என்பது மகிழ்ச்சியான விஷயம். படத்தொகுப்பு, கிராபிக்ஸ் போன்ற காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்தால் படத்தின் தன்மை மேலும் உயர்ந்து இருக்கும். இருப்பினும் இத்தகைய புதிய முயற்ச்சியை ஆதரித்து படக்குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய படத்தின் தயாரிப்பாளர் விஜய முரளி அவர்களுக்கு பாராட்டுக்கள். மேலும் இதுபோன்ற புதிய முயற்ச்சிகளை ஆதரித்து வளர செய்யவேண்டும் என்பதற்கு அடடே படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. 

Read More about :

share