Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஆதி ஹன்சிகா இணைத்து நடிக்கும் 'பார்ட்னர்' படப்பிடிப்பு இன்று துவங்கியது.

ஆதி ஹன்சிகா இணைத்து நடிக்கும் 'பார்ட்னர்' படப்பிடிப்பு இன்று துவங்கியது.

இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக இருந்த மனோஜ் தாமோதரன் ’பார்ட்னர்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். ஆதி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக பல்லக் லால்வானி நடிக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கும் 'குப்பத்து ராஜா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.

படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ஹன்சிகா நடிக்க இருக்கிறார். நகைச்சுவை  நடிகர்கள் பாண்டியராஜன், யோகிபாபு, ரோபோ சங்கர், விடிவி கணேஷ், ஜான் விஜய், ரவி மரியா, 'டைகர்' தங்கதுரை உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆர்.எஃப்.சி. கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.பி.கோலி தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.

share