Kollywood News

  • Home/
  • Cine News/
  • மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளார் : விக்னேஷ் சிவன்

மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளார் : விக்னேஷ் சிவன்

கோலமாவு கோகிலா’. வருகிற வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 17 ரிலீஸாகும் இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். யோகிபாபு, சரண்யா பொன்வண்ணன், அறந்தாங்கி நிஷா, ஜாக்குலின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

 லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசையமைத்துள்ளார். விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் மூவரும் இந்தப் படத்துக்குப் பாடல்கள் எழுதியுள்ளனர். ‘கல்யாண வயசுபாடலை எழுதி பாடலாசிரியராக இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

 இந்தப் படத்துக்காககண்ணின் காதல்என்ற புரமோஷன் பாடலை இயக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். அனிருத் மற்றும் நயன்தாரா இருவரும் இடம்பெற்ற இந்தப் பாடலுக்கு, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் பாடலையும் விக்னேஷ் சிவனே எழுத, அனிருத் இசையமைத்துள்ளார்.

 விஜய் சேதுபதி ஜோடியாக நயன் நடித்தநானும் ரவுடிதான் படத்தை இயக்கியவர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு மூன்று வருடங்கள் கழித்து நயன்தாராவை இயக்கியுள்ளார். ‘மூன்று வருடங்களுக்குப் பிறகு இந்த அழகியுடன் பணியாற்றியிருக்கிறேன்என நயன்தாராவுடன் எடுத்த செல்ஃபியை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

Read More about :

share