Kollywood News

  • Home/
  • Cine News/
  • மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்கும் சாய் பல்லவி:

மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்கும் சாய் பல்லவி:

சாய் பல்லவி 'ப்ரேமம்' என்ற மலையாள படத்தின் மூலம் பிரபலமானவர். இப்படத்தை தொடர்ந்து துல்கர் சல்மானுடன் கலி என்ற படத்தில் நடித்தார்.

அதன் பின் சாய் பல்லவியின் கவனம் முழுவதும் தமிழ்,தெலுங்கு படங்களில் இருந்தது. தற்போது 3 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

பகத் பாசில் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சாய்ப்பல்லவி நடிக்கவுள்ளார். 'அதிரன்' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் விவேக் இயக்கவுள்ளார்.

இந்நிலையில் கேரள ரசிகர்களுக்காக தனது ட்விட்டர் பக்கத்தில் புது கெட்டப்பை கேரள புடவையில் வெளியிட்டுள்ளார் சாய் பல்லவி.

share