Kollywood News

  • Home/
  • Cine News/
  • ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'ஐரா' ப்ரோமோ வீடியோ வெளியீடு:

ராதாரவிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 'ஐரா' ப்ரோமோ வீடியோ வெளியீடு:

நடிகர் ராதாரவி, நடிகை நயன்தாரா குறித்து பேசிய சர்ச்சை பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நயன்தாரா ரசிகர்களும், திரையுலகினர்களும் அவருக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நயன்தாரா நடிப்பில் வரும் 28ஆம் தேதி வெளியாகவுள்ள 'ஐரா' படத்தின் புரமோ வீடியோ ஒன்று நேற்று வெளியாகியுள்ளது. அதில் 'நீ மீடியாலதான இருக்க நாலுஅஞ்சு பேர் கூட இருக்கமா இந்த பொசிஷன்க்கு வந்துருவியா' என்று ஒருவர் கேள்வி கேட்க, அதற்கு நயன்தாரா 'உன்னை மாதிரி ஆளுங்கனாலதான் ஃபேமிலியை சப்போர்ட் பண்ணனும் நினைக்கிற பொம்பளைங்க கூட வெளியே போய் நிம்மதியாக வேலை செய்ய முடியல' என்று நயன்தாரா பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலர் 'ராதாரவிக்கு நயன்தாரா கொடுத்த பதிலடியாகவே கருதுகின்றனர். 

சரியான நேரத்தில் இந்த புரமோ வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.

share