Kollywood News

  • Home/
  • Cine News/
  • போனி கபூருக்கு வேண்டுகோள் விடுக்கும் அஜித் ரசிகர்கள்- இது நடக்குமா?

போனி கபூருக்கு வேண்டுகோள் விடுக்கும் அஜித் ரசிகர்கள்- இது நடக்குமா?

அஜித், வினோத் இயக்கத்தில் தன்னுடைய 59வது படத்தில் நடித்து வருகிறார். நேர்கொண்ட பார்வை என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழுக்க நடந்தது.

தற்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் இப்படத்தை தயாரிக்கிறார், அதோடு சமீபத்தில் அவர் அஜித்தை பாலிவுட்டிற்கு அழைத்து செல்வேன், அதற்காக இப்போது 3 கதைகள் என்னிடம் உள்ளது, அவர் தான் தேர்வு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

அவரின் பேட்டி கேட்டதில் இருந்து அஜித் ரசிகர்கள் போனி கபூருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். அதாவது அஜித்தை வைத்து தூம் 4 படம் எடுங்கள் என்கின்றனர். இது நடக்குமா எதிக்காலத்தை என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read More about :

share