Kollywood News

  • Home/
  • Cine News/
  • செண்டிமெண்ட் பார்க்கும் தல அஜித்:

செண்டிமெண்ட் பார்க்கும் தல அஜித்:

தல அஜித் படம் என்றால் தமிழ் சினிமாவில் எப்போதும் மாஸ் ஓப்பனிங் இருக்கும். தற்போது இவர் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் என படக்குழு அறிவித்தனர்.

அப்படியிருக்க ஆகஸ்ட் 10 என்பது சனிக்கிழமை. ஆனால், தற்போதெல்லாம் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என்று 4 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் வசூலாக பார்க்கின்றனர்.

ஆனால் நேர்கொண்ட பார்வை சனிக்கிழமை ரிலிஸாவது ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான், படம் ரிலிஸான அடுத்த வாரமே பக்ரீத், சுதந்திர தினம் வருகிறது என்றாலும், வியாழன் ரிலிஸ் செய்தால் இன்னும் அதிக வசூல் பார்க்கலாம் என்பது விநியோகஸ்தர்கள் விருப்பமாக இருக்கிறது.

ஆனால், அஜித்தோ வீரம், வேதாளம், விஸ்வாசம் 10ஆம் தேதி வந்ததால் இந்த படத்தையும் 10ஆம் தேதி ரிலிஸ் செய்து அதே போல் ஹிட் அடிக்க நினைத்துள்ளார்.
 

Read More about :

share