Kollywood News

  • Home/
  • Cine News/
  • சென்டிமென்ட் பார்த்து ரிலீஸ் ஆகும் அஜித் படங்கள்:

சென்டிமென்ட் பார்த்து ரிலீஸ் ஆகும் அஜித் படங்கள்:

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் 'நேர் கொண்ட பார்வை' வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஹிந்தியின் 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படத்தை எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார். வித்யா பாலன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்படம் வெளியாகவுள்ள ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இதுவரை 8 அஜித் படங்கள் வெளியாகியுள்ளன. அதன் வரிசையில் 9வது படமாக நேர் கொண்ட பார்வை இணையவுள்ளது.

மேலும் 10ஆம் தேதி செண்டிமெண்ட்டிலும் பல அஜித் படங்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் விஸ்வாசம் படமும் ஜனவரி 10ஆம் தேதி வெளியானது.  

share