Kollywood News

  • Home/
  • Cine News/
  • அஜித்தின் நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு:

அஜித்தின் நேர் கொண்ட பார்வை ரிலீஸ் தேதி அறிவித்த படக்குழு:

வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. 

படத்தின் படப்பிடிப்பு பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் படத்தின் பி ஆர் ஓ சுரேஷ் சந்திரா படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறார்.

வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளதாம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். போனி கபூர் தயாரித்து வெளியிடுகிறார்.

share