Kollywood News

  • Home/
  • Cine News/
  • கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.5 கோடிகொடுத்தாராம் அஜித் : 7ஜி சிவா

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.5 கோடிகொடுத்தாராம் அஜித் : 7ஜி சிவா

கஜா புயல் நிவாரண நிதியாக அஜித் 5 கோடி ரூபாய் கொடுத்தார் என்று சேலம் விநியோகஸ்தர் 7ஜி சிவா கூறியுள்ளார்.

2019 பொங்கலுக்கு அஜித் நடிப்பில் 'விஸ்வாசம்' வெளியாகவுள்ளது. இதனை எப்படியெல்லாம் கொண்டாடலாம் என்பதற்கான ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் நேற்று (டிசம்பர் 2) நடைபெற்றது. இதில் விநியோகஸ்தர் 7ஜி சிவா கலந்து கொண்டார்.

ஆலோசனைக் கூட்டத்தில் 7ஜி சிவாபேசும் போது “அஜித் சார் கஜா புயல் நிவாரண நிதியாக 15 லட்சம் கொடுத்தார் என்று அனைவருமே சொல்வார்கள். ஆனால், அஜித் சார் 5 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். தான் செய்த உதவிகளை வெளியே சொல்லாமல் இருப்பதுதான் அவருடைய கேரக்டர். அவருடன் பெர்சனலாகப் பேசியிருக்கிறேன், பழகியிருக்கிறேன் என்பதால் எனக்குத் தெரியும். அஜித் சார் எதையுமே விளம்பரப்படுத்திக் கொள்ளமாட்டார்” என்று பேசியுள்ளார் 7ஜி சிவா.

Read More about :

share