அஜித்துக்கு கிடைத்த பெருமைக்குரிய பதவி

தல அஜித் நடிப்பு மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்  ரேஸ், கார் ரேஸ் உள்பட பல விஷயங்களில் ஆர்வம் காட்டுபவர் என்பது  தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் அஜித் ஏரோ மாடலிங்கில் கவனத்தை திருப்பியுள்ளார் என்பதும் இது தொடர்பான பிரத்யேக தொழில்நுட்பத்தைப் பற்றி தெரிந்துகொள்ள சென்னை குரோம்பேட்டையிலுள்ள எம்..டி கல்லூரியின் ஏரோ மாடலிங் துறைக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் சென்று வந்தார் என்றும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் எம்..டி என்ற மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லுரி ஹெலிகாப்டர்  சோதனை பைலட் மற்றும் ஆளில்லா விமான அமைப்பின் ஆலோசகராக அஜித்தை நியமனம் செய்துள்ளது. இந்த தகவல் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

பெரும்பாலான மாஸ் நடிகர்கள் நடிப்பு தொழிலை அடுத்து அரசியலை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிலையில் அஜித் மட்டும் வித்தியாசமான துறையில் ஆர்வம் காட்டி வருவதே அவருடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்க காரணமாக இருப்பதாக கோலிவுட் திரையுலகம் கூறுகின்றது.

Source : Indiaglitz

Read More about :

share