Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரு நாளைக்கு ஒரு கோடி... அஜித்தையே மிரட்டும் ‘அழகு ராணி’ தயாரிப்பாளர்..??

ஒரு நாளைக்கு ஒரு கோடி... அஜித்தையே மிரட்டும் ‘அழகு ராணி’ தயாரிப்பாளர்..??



நானும் ரெளடிதான் படத்தில் தன்னை ஒரு வெற்றி இயக்குனராக ஆக்கிக் கொண்டவர் ‘விக்னேஷ் சிவன்’. மேலும், இந்த படத்தில் இருந்துதான் நயன்தாராவின் வெற்றி ஏறுமுகம் காட்டியது.

அதற்கு முழுகாரணமே விக்னேஷ் சிவன் தான். இதனாலேயே சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் அவரது கையால் தான் விருதினை பெற்றுக் கொள்வேன் என்று நயன்தாரா கூறும் அளவிற்கு இவரது நட்பில் பிரிக்க முடியாது ஒரு பாசமும் ஏறியது..

இந்நிலையில் விக்னேஷ் சிவன் அஜித்திற்காக கதை ஒன்றை தயார் செய்து வைத்திருக்கிறாராம். ஏற்கனவே முன்னணி இயக்குனர்கள் அஜித்திற்காக வரிசை கட்டிக் கொண்டு நிற்கும் போது இவர் எப்படி தைரியமாக கதை எழுதியிருக்கிறார் என்று தோன்றலாம்.

அதற்கான காரணம் நயன்தான். ஆம், இந்த படத்தினை தான் தயாரிப்பதாக தமிழ் சினிமாவில் அழகு ராணியாக வலம் வரும்  நயன், விக்னேஷ் சிவனிடம் கூற, அஜித்திற்காக ஒரு நாளைக்கு ஒரு கோடி கொடுக்க தான் தயாராக இருப்பதாக நயன் கூறியுள்ளாராம்.

மொத்தமாக 45 நாட்கள் கொடுத்தால் போதும், அதற்கு மேல் நாட்கள் எடுத்துக் கொண்டாலும் ஒரு நாளைக்கு ஒரு கோடி வீதமும் தந்து விடுவதாகவும் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தரப்பினர் கூறி வருகின்றனராம்.

அஜித் தரப்பில் இருந்து இன்னும் எந்த தகவலும் வரவில்லையாம்.... நயன் தயாரிக்க, விக்னேஷ் சிவன் இயக்க, ‘தல’யின் ஆட்டம் ஆடுமா..?? பார்க்கலாம்...

share