Kollywood News

  • Home/
  • Cine News/
  • அமலாபால் போலீசில் பாலியல் தொல்லை புகார்... ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்!

அமலாபால் போலீசில் பாலியல் தொல்லை புகார்... ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர்!


நடிகை அமலா பால் தமிழில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டோருடன் நடித்து வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகை அமலாபால் நடனப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக சென்னை தியாகராய நகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார்,

நடன வகுப்பின் போது டான்ஸ் மாஸ்டர் தன்னிடம் ஆபாசமாக பேசி தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அமலாபால் தனது புகாரில் தெரிவித்துள்ளார் 

இதனை தொடர்ந்து சென்னை கொட்டிவாக்கத்தை சேர்ந்த அழகேசன் என்ற தொழிலதிபர் ஒரு மணி நேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அழகேசனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read More about :

share