Kollywood News

  • Home/
  • Cine News/
  • நடிகர் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்திய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்- என்ன செய்தார் பாருங்க:

நடிகர் சிவாஜி கணேசனுக்கு மரியாதை செலுத்திய பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன்- என்ன செய்தார் பாருங்க:

தமிழ் சினிமாவில் முந்தைய காலத்தில் மறக்க முடியாது நடிகர்கள் இருந்தார்கள். அதில் ஒருவர் நடிகர் சிவாஜி கணேசன்.

இவரின் புகழ் உலகமெங்கும் பரவியது, ஆனால் இவர் வெகு விரைவிலேயே நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். நடிகர் திலகம் என்று இவருக்கு கொடுத்த பட்டத்தை யாராலும் எதிர்க்க முடியாது. அந்த அளவிற்கு எல்லா விதமான வேடத்திற்கும் ஒரு முன் உதாரணமாக இருப்பார்.

சிவாஜி அவர்களுக்கு தன்னுடைய மரியாதையை செலுத்தியுள்ளார் அமிதாப் பச்சன். உயர்ந்த மனிதன் என்ற படத்தில் அமிதாப் பச்சன் அவர்கள் நடித்து வருகிறார்.

அந்த படப்பிடிப்பில் எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் போட்டு, சிவாஜி கணேசன் என்ற மாஸ்டரின் கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். தமிழ் சினிமாவில் பொக்கிஷம் சிவாஜி கணேசன். அவருடைய படத்தை சுவரில் மாட்டி அவரது பாதம் தொட்டு வணங்கி மரியாதை செய்தோம். அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள் என்று பதிவு செய்துள்ளார்.

Read More about :

share