தமிழ் சினிமா ஒவ்வொரு மாதமும் ஏதாவது ஒரு பிரச்சனைகளால் சிக்கிக் கொண்டு வருகிறது. சசிகுமார் அவர்களின் உறவினர் அசோக்குமார் இறந்தது சினிமா பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தன்னுடைய தற்கொலைக்கு பைனான்சியர் அன்பு செழியன் தான் காரணம் என கடிதம் எழுதியிருந்தார்.
அவரது தற்கொலைக்கு பிறகு பல பிரபலங்கள் அன்பு செழியனுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பு தெரிவித்தும் பேசி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை பூர்ணா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அன்பு செழியனை திட்டி டுவிட் செய்திருக்கிறார்.