Kollywood News

  • Home/
  • Cine News/
  • ஒரிஜினல் கேரக்டரில் நடிக்கும் நடிகை ஆண்ட்ரியா

ஒரிஜினல் கேரக்டரில் நடிக்கும் நடிகை ஆண்ட்ரியா

பிரபல நடிகை ஆண்ட்ரியா ஒரு திறமையான நடிகையாக மட்டுமின்றி ஒரு நல்ல பாடகி மற்றும் பின்னணி குரல் கொடுப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் பாடிய 'கண்ணும் கண்ணும் நோக்கியா', 'உன் மேல ஆசைதான்', 'கூகுள் கூகுள்' 'மாமா டவுசர்' போன்ற பல பாடல்கள் சூப்பர் ஹிட் ஆனவை

இந்த நிலையில் நடிகை ஆண்ட்ரியா நிஜத்தில் நல்ல பாடகியாக இருக்கும் நிலையில் ஒரு படத்தில் பாப் பாடகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். 'ஆயுஷ்மான் பவா' என்ற தெலுங்கு படத்தில் தான் ஆண்ட்ரியா பாப் பாடகியாக நடிக்கவுள்ளார். சரண்தேஜ் இயக்கி நாயகனாக நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பில் விரைவில் ஆண்ட்ரியா இணையவுள்ளதாகவும், இனிவரும் காலங்களில் தெலுங்கு திரையுலகில் ஆண்ட்ரியா தீவிர கவனம் செலுத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கமல்ஹாசனுடன் ஆண்ட்ரியா நடித்துள்ள 'விஸ்வரூபம் 2' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் தனுஷின் 'வடசென்னை' படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source : Indiaglitz

Read More about :

share