மிஷ்கின் படத்துக்காக பைக் ஓட்ட கற்றுக்கொள்ளும் ஆண்ட்ரியா!மிஷ்கின் இயக்கத்தில் விஷால் மற்றும் பிரசன்னா நடித்துவரும் படம் ‘துப்பறிவாளன்’. ஆரம்பத்தில் இந்தப் படத்தில் நடிக்க கமிட்டானார் அக்ஷரா ஹாசன். ஆனால், அஜீத்துடன் ‘விவேகம்’ படத்தில் நடிப்பதால், கால்ஷீட் பிரச்னை இருந்தது. எனவே அவர் விலகிக்கொள்ள, அவருக்குப் பதிலாக ஆண்ட்ரியா இணைந்துள்ளார். 90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. 

இன்னும் ஒருசில காட்சிகளே இருக்கும் நிலையில், ஹார்லி டேவிட்சன் பைக்கை ஆண்ட்ரியா ஓட்டும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. விசாரித்துப் பார்த்தால், கதைப்படி அவர் அந்த பைக்கை ஓட்ட வேண்டுமாம். ஆனால், அவருக்குத் தெரியாததால், கடந்த சில நாட்களாகப் பயிற்சி எடுத்து வருகிறாராம். நன்றாக ஓட்ட கற்றுக்கொண்ட பிறகு படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என்று கூறிவிட்டாராம் மிஷ்கின்.

share