Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழ் படம் இயக்குவேன் - அனுராக் காஷ்யப்

தமிழ் படம் இயக்குவேன் - அனுராக் காஷ்யப்

இமைக்கா நொடிகள் மூலம் கோலிவுட்டில் வில்லனாக அறிமுகமான, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் கூறியதாவது:

தமிழில் இயக்குனராக நினைத்தேன் என்றாலும், நடிகராக அறிமுகமானது மகிழிச்சிதான். இதில் நடிக்கும்போதே 2 இந்தி மற்றும் ஒரு வெப்சீரிஸில் நடித்துவிட்டேன். இந்தியில் திட்டமிட்டு படம் எடுப்பார்கள். ரிலீஸ் செய்வதில் பிரச்னை இருக்காது. தமிழில் இதுபோன்ற விஷயங்களை உடனே முறைப்படுத்த வேண்டும். என்னை தேடி வரும் கேரக்டர்களை பொறுத்து, தொடர்ந்து வில்லனாக நடிப்பது குறித்து முடிவு செய்வேன். விரைவில் நேரடி தமிழ் படம் இயக்குவேன். படத்தில் நடிக்கும்போது அங்கு என்னை இயக்குனராக வெளிப்படுத்த மாட்டேன். நான் எப்படி நடித்திருக்கிறேன் என்று மானிட்டரில் கூட பார்க்க மாட்டேன்.

திரையுலகில் எனக்கு பலமுகங்கள் இருந்தாலும் இயக்குனர் என்ற முகத்தை மட்டுமே விரும்புகிறேன். என்று அவர் கூறினார்.

Read More about :

share