Kollywood News

  • Home/
  • Cine News/
  • தமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்

தமிழக அரசின் அப்துல்கலாம் விருது : அஜித்

பைக் ரேஸ், போட்டோகிராபி, சமையல், நடிப்பு, தொழில் நுட்பம் என்று பல துறைகளில் ஆர்வம் கொண்டவர் நம்ம தல அஜித். தனது வாழ்நாளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான இவர் சமீபத்தில்கூட பிரபல பல்கலைகழகமொன்றில் விமானம் பற்றி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியராக பணியாற்றி அவர்களுக்கு வெற்றியையும் தேடித்தந்தார்.

 

சரி விசயத்திற்கு வருவோம். தமிழக அரசின் அப்துல்கலாம் விருதானது சென்னை அண்ணா பல்கலைகழகத்திலுள்ள வான்வெளி ஆராய்ச்சி மையமான தக்-ஷா குழுவிற்கு வழங்கப்படுகிறது.

இந்த தக்-ஷா குழுவிற்கு பொறுப்பாளராக இருந்தது நம்ம தல அஜித்தான், எனவே தமிழக அரசு அஜித்திற்கும் விருது வழங்கி கௌரவிக்க உள்ளது.

 

சுதந்திர தினமான இன்று அஜித்திற்கு இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததை அறிந்த ரசிகர்கள் தங்கள் மகிழ்ச்சியை இனிப்பு வழங்கி கொண்டாடிவருகின்றனர்.

Read More about :

share