Kollywood News

  • Home/
  • Cine News/
  • பல தடைகளை உடைத்து மாஸ்ஸாக வரும் தளபதி சர்க்கார்

பல தடைகளை உடைத்து மாஸ்ஸாக வரும் தளபதி சர்க்கார்

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' திரைப்படம் வரும் தீபாவளி திருநாள் அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

விஜய்யின் படங்களுக்கு ரிலீஸின் போது ஏதாவது ஒரு பிரச்சனை வருகிறது. இதை ரசிகர்களும் வெறுக்கிறார்கள், படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்து சர்கார் படம் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் நடந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை, தான் கடந்த 2007ஆம் ஆண்டு எழுதிய 'செங்கோல்' என்ற கதை என்று கூறி வருண் ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கின் இன்று விசாரணைக்கு வந்த நிலையில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் சன்பிக்சர்ஸ் சார்பில் நீதிமன்றத்தில் வருண் ராஜேந்திரனுடன் சமரசம் செய்து கொண்டதாக தகவல் தெரிவித்தனர். 

எனவே சர்க்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது.

share