Kollywood News

  • Home/
  • Cine News/
  • சர்கார் சர்ச்சை: மன்னிப்பு கோர முடியாது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

சர்கார் சர்ச்சை: மன்னிப்பு கோர முடியாது இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'சர்கார்' படத்தில் அரசின் விளம்பர பொருட்களை விமர்சிக்கும் வகையில் காட்சி இருந்ததால் அந்த காட்சிகளுக்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஏ.ஆர்.முருகதாஸ் முன் ஜாமீன் பெற்ற நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

நேற்றைய விசாரணையின்போது, 'ஏ.ஆர்.முருகதாஸ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இதுபோன்ற காட்சிகள் படமாக்கப்பட மாட்டேன் என்ற உத்தரவாதம் தர வேண்டும் என்றும் அரசு தரப்பில் வாதாடப்பட்டது.

இதை தொடர்ந்து மன்னிப்பு கோர முடியாது என்று சர்கார் பட இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சென்னை உயர்நீதி மன்றத்தில் தெரிவித்தார். அரசின் திட்டங்களை விமர்சிப்பது என்பது தன் கருத்து சுதந்திரம் என்றும் தெரிவித்துள்ளார். 

Read More about :

share