Kollywood News

  • Home/
  • Cine News/
  • மரியானுக்கு பிறகு மீண்டும் தனுஷ் - ஏ ஆர் கூட்டணி...???

மரியானுக்கு பிறகு மீண்டும் தனுஷ் - ஏ ஆர் கூட்டணி...???


தனுஷ் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியானது மரியான். இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் ஏ ஆர் ரகுமான். தற்போது தொடரி, கொடி என இரண்டு படங்களை கைவசம் எடுத்து முடித்து வைத்திருக்கும் தனுஷ் அடுத்ததாக இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில் “என்னை நோக்கி பாயும் தோட்டா” என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இன்னும் படத்தின் இசையமைப்பாளர் முடிவாகவில்லை. கெளதம் மேனன் இயக்கத்தில் விண்ணைதாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரு படங்களுக்கும் இசையமைத்த ஏ ஆர் ரகுமானே இந்த படத்திற்கும் இசையமைக்க வேண்டும் என இயக்குனர் ஆசைப்பட, இசைப்புயலை நாடிருக்கின்றனர் படக்குழுவினர்.

இன்னும் இசைப்புயலிடம் இருந்து எந்தவொரு பதிலும் இன்னும் வரவில்லையாம். ஏ ஆர் ரகுமான் தான் படத்திற்கு இசையமைப்பார் என நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மரியானுக்கு பிறகு மீண்டும் தனுஷோடு கைகோர்ப்பாரா ஏ ஆர் ரகுமான்..

share